முஸ்லீம்'னா ஏன் இப்படி பண்றீங்க...வாக்குவாதம் செய்த சீமான்....வலுக்கும் எதிர்ப்புகள்

Naam tamilar kachchi Tamil nadu Seeman
By Karthick Sep 28, 2023 10:18 AM GMT
Report

நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது சீமான், இஸ்லாமியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கு கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீமான்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,"2 திராவிட கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் தனக்கு பின்னால் நிற்கிறார்கள்." என்று கூற, உடனே செய்தியாளர் ஒருவர் "ஒரு தொகுதிக்கு 3,000 ஓட்டு மட்டும் வாங்கினால் போதுமா சார்? என வினவினார்.

seeman-muslim-reporter-fight-problem

இதனால் சட்டென எரிச்சலைடந்த சீமான், "ஒரு தொகுதிக்கு 25,000 ஓட்டு வாங்கி இருக்கேன் - நீங்க தூக்குல தொங்குவீங்களா? என்றும் தூத்துக்குடியில் 35,000 ஓட்டு வாங்கி உள்ளேன் -விஷம் குடிக்கின்றீர்களா? என்று ஆவேசமாக வினவி, 3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்கள் - நான் தீக்குளிக்கிறேன். எந்த இதழில் இருந்து வருகிறீர்கள்?" என கொந்தளித்தார்.

SDPI கண்டனம்

தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரை பத்திரிகையாளர் கூறிய பிறகு, அவரின் பெயரை சீமான் கேட்க பத்திரிகையாளர் "சிராஜுதீன் என்றவுடன் "அப்ப நீ பேசுவ" என சீமான் அவரை ஒருமையில் விமர்சித்தார்.

seeman-muslim-reporter-fight-problem

சீமானின் இந்த செயலுக்கு நேற்று முதலே கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றது. இது குறித்து தனது சமூகவலைதளபக்கத்தில் கண்டனத்தை தெரிவித்த SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடிய ஒருவரிடம் சரியான தரவுகள் இன்றி கேள்வி கேட்டது தவறுதான், கண்டிக்கிறேன்! என்று பதிவிட்டு கேட்டவர் பெயர் சிராஜ் என்றவுடன் கூடுதல் சீற்றமுடன் பொங்கி எழுவதும் தவறுதான், இதுவும் கண்டனத்திற்குரியதே!! என சீமானை விமர்சித்து முஸ்லிம் என்றவுடன் நீங்கள் எல்லாம் அப்படித்தான் என்பது பாசிச மனோபாவமாயிற்றேஅது உங்களிடமுமா? என்று கேட்க எனக்கு உரிமை உள்ளது...!!!" என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.