Saturday, Jun 28, 2025

என் மகளை பற்றியா தப்பா பேசுனீங்க..அதற்குலாம் அனுபவிப்பீங்க - பயில்வான் பேட்டி!

Youtube Shakeela Marriage Bayilvan Ranganathan
By Swetha a year ago
Report

தனது மகள் குறித்த விமர்சனம் பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

பயில்வான் பேட்டி 

தமிழ் சினிமாவின் குணச்சித்திர ன்னாடிகர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் பத்திரிகை நிருபராகவும் பணியாற்றி வருகிறார். அவரது யூட்யூப் சேனலில் அரசியல் மற்றும் சினிமா விமர்சனங்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தை பேசி வீடியோ பதிவு செய்தி வருகிறார்.

என் மகளை பற்றியா தப்பா பேசுனீங்க..அதற்குலாம் அனுபவிப்பீங்க - பயில்வான் பேட்டி! | Bayilvan Ranganathan About His Daughters Marriage

இதனால் பயில்வான் ரங்கநாதனுக்கு பலவிதமான எதிர்ப்பு வரும் போதும், நான் உண்மையைத்தான் பேசுகிறேன், மக்களின் ஆதரவு எனக்கு இருக்கு என்று தொடர்ந்து அவ்வாறே பேசி வருகிறார். கடந்த மாதம் பிரபல நடிகை ஷகிலா மற்றும் பயில்வான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, ஷகிலா பயில்வானின் மகள் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என ஒரு குற்றசாட்டை முன் வைக்கிறார். இந்த விவகாரம் மிக பெரிய பேசுபொருளாக மாறியது. இதனால் அவரது மகள் குறித்து மோசமான கருத்துக்கள் பரவிய நிலையில், திங்கட்கிழமை அவரது வீட்டில் எளிமையான முறையில் அவரது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இதன் போட்டோக்களை பயில்வான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தனது மகள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பயில்வான், என் மகளை பற்றி ஒரு நடிகை தகாத வார்த்தையை சொல்லிவிட்டார், அவரின் பெயரைக்கூட நான் சொல்லவிரும்பவில்லை. இதனால், என் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.

நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்!

நல்ல அப்பா இல்ல; உங்க கடைசி பொண்ணு.. - ஷகிலாவின் பேச்சால் கடுப்பான பயில்வான்!

அனுபவிப்பீங்க.. 

என் மகளை பற்றியா தப்பா பேசுனீங்க..அதற்குலாம் அனுபவிப்பீங்க - பயில்வான் பேட்டி! | Bayilvan Ranganathan About His Daughters Marriage

உடனே என் சம்மந்தி திருமணத்தை சீக்கிரமாக முடித்துவிடலாம் என்று சொன்னார். செப்டம்பர் 15ந் தேதி கல்யாணம் அதற்கு முன்பாக,வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் எங்கள் வீட்டில் உள்ளவர்களும், சம்மந்தி வீட்டில் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள். என் மருமகன் சிவா எம்பிஏ படித்து இருக்கிறார், என் மகள் பிகாம் படித்து இருக்கிறாள்.

இருவரும் ஐடியில் வேறு வேறு இடத்தில் வேலை செய்கிறார்கள். இணையத்தில் பரவிய செய்தியால் குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டனர். ஆனால், என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். நான் பத்திரிக்கை துறையில் இருக்கிறேன், இதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.

நான் கெட்டதைபற்றி பேசியதால் நான் கெட்டவனாகி விடுவேனா. அந்த அம்மா என் மகளை பற்றி தவறாக பேசியதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியும். இப்படி அவர் பேசியதற்கான விளைவை அவர் அனுபவிப்பார்.

எனக்கு குடும்பம் இருக்கு, பேரன் பேத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கு? எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.