அவருக்கு 46 வயசு; சங்கீதா திடீரென திருமணம்; காரணமே இதுதான் - போட்டுடைத்த பிரபலம்
சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி திருமணம் குறித்து பயில்வான் சில தகவல்கள் தெரிவித்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி திருமணம்
காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா,டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து, அண்ணாத்த, ஜெய்லர், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு
இந்நிலையில், அண்மையில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும், இவரது திருமணம் குறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ரெடின் கிங்ஸ்லிக்கு 46வயசு ஆவதால், இது தான் முதல் திருமணமான என்று பேச்சு வருகிறது.

சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவருக்கும் இது முதல் திருமணம் தான். துணை நடிகையாக இருந்த சங்கீதா திருமகள் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரெடின் கிங்ஸ்லி சினிமாவில் ஆரம்பகாலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தபோதே இருவரும் காதலித்து வந்த நிலையில்,பல ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil