46 வயதில் மாஸ்டர் பட நடிகையை கரம் பிடித்த ரெடின் கிங்ஸ்லி...!!
தற்போதைய தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நகைச்சுவை நடிகராக வளம் வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.
ரெடின் கிங்ஸ்லி
2018 -ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவரின் வசன உச்சரிப்பிற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ரெடின் கிங்ஸ்லி அதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் மீண்டும் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அட்லீ வசனத்தில்...படம் நடிச்சிருக்கணும்!! மிஸ் ஆகிடுச்சு.. இளம் நடிகர் வருத்தம்..!!
திருமணம்
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இன்று ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து உள்ளார்.
Happy married life @kingsely_redin . Wishing blockbuster life ahead . And this is for real not from any film sets . pic.twitter.com/P9dMgU2RSr
— Sathish krishnan (@dancersatz) December 10, 2023
இந்த விஷயத்தை நடிகர் சதிஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, திருமண வாழ்த்துக்கள். இந்த புகைப்படம் ஷூட்டிங் செட்டில் இருந்து எடுக்கவில்லை. உண்மையில் இவர்களுக்கு திருமணம் தான் என்று பதிவிட்டுள்ளார்.