தங்கை கணவரிடம் விருப்பம் தெரிவித்த ஐஸ்வர்யா - மறுப்பு சொன்ன ரஜினிகாந்த்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த தகவல் ஒன்றை பயில்வான் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் லீட் ரோலில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது.

அதன்பின், சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
பயில்வான் தகவல்
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில், " சௌந்தர்யாவின் இரண்டாவது கணவர் சினிமாவில் ஆர்வம் உடையவர். அவருக்கு படங்களில் நடிக்க விருப்பம். இந்த சூழலில் ஐஸ்வர்யா தனது தங்கையின் கணவரை தன்னுடைய படத்தில் நடிக்குமாறு தெரிவித்து இருக்கிறார்.

இதை அறிந்த சௌந்தர்யா, என்னுடைய கணவரை அவரது தொழிலை கவனிக்கட்டும். அவர் நடிக்க சென்றால் என் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார் என்று கூறியிருக்கிறார். இப்படி சௌந்தர்யா ஐஸ்வர்யா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை அறிந்த ரஜினிகாந்த், குடும்பத்துல ஒருவர் நடித்தால் போதும் என்று சொல்லி இருவரையும் சமாதானப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பயில்வான் ரங்கநாதனின் சொந்த கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan