ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா? வெளியான அதிர்ச்சி தகவல்!
ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுமே மாற்றுத்திறனாளி என செய்தி பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் லதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே, இயக்குநராக உள்ளனர். ஐஸ்வர்யா தற்போது கணவர் தனுஷை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார்.
இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யாவின் ஆரம்ப காலம் குறித்து தகவல் ஒன்று பரவி வருகிறது.
மாற்றுத்திறனாளி?
அவர் பிறந்தபோது அவருடைய ஃபோட்டோவை ரஜினி பொதுவெளியில் வெளியிடாமலும், அவர் குறித்து எந்தவொரு தகவலையும் பகிர்ந்துக் கொள்ளாமல் மெளனமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பெண் குழந்தை என பத்திரிக்கையாளர்காள் தெரிந்துக் கொண்டனர்.
மேலும், அவர் மாற்றுத்திறனாளி என்றெல்லாம் செய்திகள் வெளியாகியது. ஆனால் இதையெல்லாம் பெரிதாக ரஜினி கண்டுக்கொள்ளவில்லை. அதன்பின், பல வருடங்கள் கழித்து ஐஸ்வர்யா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்பது தெரியவந்து செய்திகள் வெளியானது.
மன்மதன் பட பூஜையில்தான் ஐஸ்வர்யா முதல்முறையாக மீடியா முன் தோன்றியது குறிப்பிடத்தக்கது.