என்னில் ஒரு பாதி அவர்; அதை நம்பவே முடியல - உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Aishwarya Rajinikanth
By Sumathi Nov 03, 2023 07:39 AM GMT
Report

மேத்யூ பெர்ரியின் மரணம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேதனை பகிர்ந்துள்ளார்.

மேத்யூ பெர்ரி மரணம்

ப்ரெண்ட்ஸ்(Friends) தொடரில் சாண்ட்லர் பிங்காக நடித்தவர் மேத்யூ பெர்ரி(54). அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ச்லஸ் நகரில் இருக்கும் தன் வீட்டு பாத் டப்பில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

aishwarya-rajinikanth

கெரியரின் உச்சத்தில் இருந்தபோது மேத்யூ பெர்ரிக்கு போதைப் பொருள் பழக்கம், மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.

2வது திருமணம்; மகள் மீது கோபத்தில் ரஜினி - சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா!

2வது திருமணம்; மகள் மீது கோபத்தில் ரஜினி - சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அதில் இருந்து வெளியேவர சிகிச்சைக்காக பல மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டார். அவர் இறந்தது கிடந்ததை அவரது உதவியாளர் பார்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

mathew-perry-death

இந்நிலையில், அவரது ரசிகர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர் இறந்துவிட்டார் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை. என்னில் ஒரு பகுதி அவர். உங்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என நம்புகிறேன். எங்கள் சாண்ட்லர் என வேதனை தெரிவித்துள்ளார்.