கோழி சூப்பில் பேட்டரி துண்டு; பேரம் பேசிய ஊழியர்கள் - பெண் அதிர்ச்சி!

Malaysia
By Sumathi May 08, 2023 04:54 AM GMT
Report

சிக்கன் சூப்பில் பேட்டரி துண்டு கிடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் சூப்

மலேசியா, ஜோகூர் பாரு பகுதியில் பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கார்மென் என்ற பெண் தனது மகள்கள் மற்றும் தோழிகளுடன் சென்றுள்ளார். தொடர்ந்து சூப் ஆர்டர் செய்துள்ளார்.

கோழி சூப்பில் பேட்டரி துண்டு; பேரம் பேசிய ஊழியர்கள் - பெண் அதிர்ச்சி! | Battery In Chicken Soup In Malaysia

அப்போது, அதில் காய்கறிகள் மற்றும் கோழியைத் தவிர, சூப்பில் மற்றொரு பொருள் இருப்பதை பார்த்துள்ளனர். எடுத்து பார்த்ததில் அது பேட்டரி துண்டு என அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

பேட்டரியால் அதிர்ச்சி

உடனே அந்தப் பெண் ஊழியர்களை அழைத்து சூப்பில் பேட்டரி கிடந்தது குறித்து புகார் அளித்துள்ளார். ஊழியர்கள் சமையல் அறைக்கு சூப்பை எடுத்துச் சென்று சோதனை செய்வதாக கூறியுள்ளனர். சிறிது நேரம் கழித்து தன்னுடைய சூப்பை தரும்படி கேட்டதில், ​​சூப் தூக்கி எறியப்பட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், பெண்ணை சமாதானப்படுத்தும் நோக்கில் சூப்பின் விலையில் 50% தள்ளுபடி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர், வாக்குவாதத்தில் உணவகம் முழு கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், அடுத்த ஏழு நாட்களில் ஏதாவது உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவக் கட்டணத்தை செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, உணவகத்தை விட்டு வெளியே வந்தவுடன் தனது மகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார்.