கீழே போட்ட எலும்புத்துண்டுகளை எடுத்து மீண்டும் சூப்பில் போட்ட கடைக்காரர் - வைரலாகும் வீடியோ
சென்னை, ஓ.எம்.ஆர். காரப்பாக்கம் பகுதியில் ஒருவர் நடைமேடை மீது சூப் கடை நடத்தி வருகிறார்.
இவர் அந்தப் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் சூப், சிக்கன் பகோடா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
அந்த கடையில் சூப் குடிக்க ஏராளமானவர்கள் தினமும் வருவது வழக்கம். அந்தக் கடையில் சூப் சாப்பிட்டுவிட்டு வாடிக்கையாளர்கள் எலும்புத் துண்டுகளை கீழே போட்டு விட்டுச் செல்வார்கள்.
அப்போது, இந்தக் கடைக்காரர் யாரும் பார்க்காதபோது வாடிக்கையாளர்கள் கீழே போட்ட எலும்புத் துண்டுகளை எடுத்து, அதை கழுவி, மறுபடியும் அந்த சூப்பில் போட்டுள்ளார்.
இதைப் பார்த்த ஒருவர் கடைக்காரருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.