பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் இலங்கை வீரர்! வைரலாகும் வீடியோ

cricket t10 batsman
By Jon Feb 04, 2021 04:08 PM GMT
Report

இலங்கையை சேர்ந்த பந்துவீச்சாளரான கெவின் கொத்திகோடா வித்தியாசமான முறையில் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கவிடுகிறார். சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு சிலரே மிக வித்தியாசமான முறையில் பந்துவீசுவதில் வல்லவர்கள்.

அவர்களுடன் இணைந்துள்ளார் கெவின் கொத்திகோடா, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் இடக்கை சுழற்பந்துவீச்சாளரான பால் ஆடம்ஸ் வளைந்து வந்து வித்தியாசமான முறையில் பந்துவீசுவார்.

அவரை போன்று அப்படியே வலது கை ஸ்டைலில் அசத்துகிறார் கெவின், தற்போது அபுதாபி டி10 தொடரில் விளையாடி வரும் கெவினின் பவுலிங்கால் பேட்ஸ்மேன்கள் திணறிதான் வருகின்றனர். அவரின் வித்தியாசமான பவுலிங் ஸ்டைல் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.