வாக்கு சாவடிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் - தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ள தகவலை காணலாம்.
தேர்தல்
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறும் தேர்தலை அடுத்து ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய செய்தியாளரின் சந்திப்பின் போது, வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் பேசியுள்ளார்.
அடிப்படை வசதிகள்
தேர்தல் ஆணையத்தின் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே, வாக்காளர்கள் வாக்களிப்பதை வசதியானதாக மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன என்றார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் வசதி - உதவி மையம், வாக்குச்சாவடி பெயர் பலகை, வாக்களிக்க காத்திருப்பவர்களுக்காக நிழற் கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் வகையிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவிடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.