பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் - பதவியை ராஜினாமா செய்த பொம்மை..!

Indian National Congress BJP Karnataka
By Thahir May 14, 2023 05:06 AM GMT
Report

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் 

காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை 135 தொகுதிகள் கிடைத்துள்ளதை அடுத்த அந்த கட்சி தனி பெரும்பான்மையுடன் எந்தவித கூட்டணியும் இல்லாமல் ஆட்சி அமைக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளிலும் மற்றவை நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனை அடுத்து ஆளுங்கட்சியாக இருந்த பாஜக எதிர்க்கட்சி வரிசையில் உட்கார போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

பசவராஜ் பொம்மை ராஜினாமா 

இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியதை அடுத்து முதலமைச்சர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் - பதவியை ராஜினாமா செய்த பொம்மை..! | Basavaraj Bommai Resigned From His Post

அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில் ஆளுநர் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இன்னும் ஒரிரு நாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது