அமெரிக்கா அதிபராக இருந்த போது ஒபாமா 6 முஸ்லிம் நாடுகள் மீது குண்டு வீசினார் - நிர்மலா சீதாராமன் கொந்தளிப்பு..!

Barack Obama Smt Nirmala Sitharaman BJP Narendra Modi
By Thahir Jun 26, 2023 03:05 AM GMT
Report

அமெரிக்கா அதிபராக இருந்த போது 6 முஸ்லிம் நாடுகள் மீது குண்டு வீசியவர் பாராக் ஒபாமாக என நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

பாராக் ஒபாமா கருத்து 

கடந்த 20ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார்.

Barack Obama bombed 6 Muslim countries

அப்போது முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். அதில் அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் பேசினால் இந்தியாவில் வாழ கூடிய சிறுபான்மையினரின் உரிமைகளை பற்றி பேசலாம். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட்டாவிட்டால் என்னவாகும்? என அவர் தெரிவித்து இருந்தார்.

நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை 

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இந்திய முஸ்லிம்களை பற்றி பேசியுள்ளார். நான் எச்சரிக்கையுடன் பேசுகிறேன்.

Barack Obama bombed 6 Muslim countries

அமெரிக்காவுடன் நல்ல நட்புறவை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இ்நதியாவின் மத சகிப்பு தன்மை பற்றி அமெரிக்காவில் இருந்து கருத்துக்கள் வருகின்றன.

ஒபாமா அதிபராக இருந்த போது 6 முஸ்லிம் நாடுகள் மீது வெடிக்குண்டுகள் வீசப்பட்டது என தெரிவித்தார். வெளிநாடு செல்லும் தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகளையும் அவர் விமர்சித்தார்.

அவர்களால் பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த முடியவில்லை அதனால் வேறு வழிகளில் செல்கின்றனர் அவர்களுடைய விவாதங்களில் இதுபோன்ற விசயங்கள் ஒரு பகுதியாக அமைகின்றன என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.