நெருப்பை போன்றவர் அவர்..!! அண்ணாவுடன் பானுமதியை இணைத்து பேசுவதா? - கொந்தளித்த பிரபலம்
நடிகை பானுமதியை தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுடன் ஒப்பிட்டு வதந்திகள் வெளியான நிலையில், அதனை வழக்கறிஞர் கேஎஸ் ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகை பானுமதி
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் மிக பெரிய நட்சத்திர அந்தஸ்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர் போன்றோரின் காலகட்டத்திலேயே அடைந்தவர் நடிகை பானுமதி. மலைக்கள்ளன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், நாடோடி மன்னன் என தொடர் வெற்றிபடங்களை கொடுத்த இவருக்கு இந்திய அரசாங்கம் 2003ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டு பெருமைபடுத்தப்படுத்தியது.
இவரை குறித்து சில தினங்கள் முன்பு பாஜகவை தமிழ்நாடு பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையுடன் தொடர்புபடுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகளவில் எதிர்ப்புகள் எழுந்த காரணத்தால் அதனை பின்னர் டெலிட் செய்தார்.
இருப்பினும், அண்ணாதுரை மற்றும் நடிகை பானுமதி குறித்து சில அவதூறான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பரவ தற்போது அது குறித்து வழக்கறிஞர் கேஸ் ராதாகிருஷ்ணன் விளக்கம் கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நெருப்பை போன்றவர் பானுமதி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல் வெகு நாட்களாகவே மறைந்த முதல்வர் அண்ணா மற்றும் தசாவதானி பானுமதி இருவர் பற்றியும் உண்மைக்கு மாறாக, முரணான விதத்தில், தவறான கண்ணோட்டத்துடன் இங்கே பலரும் வதந்தியாக பேசிக் வருகிறார்கள்.
கலைகளில் தீவிர மனோநிலையை கொண்ட பானுமதி எளிதில் யாரையும் அருகில் அண்ட விட மாட்டார் என்றும், தன்னுடைய கௌரவத்திற்கு இழுக்கு வராத பாத்திரங்களை மட்டும் கம்பீரமாக ஏற்று நடித்து திரையுலகில் வலம் வந்தவர்.
ஒழுக்கம் விஷயத்தில் நெருப்பை போன்றவர் - யாருக்கும் அடிபணியாதவர் என பானுமதி குறித்து பதிவிட்டுள்ள கேஸ் ராதாகிருஷ்ணன், பொது வாழ்க்கைக்கு அல்லது கலைக்கு என ஒருவர் வந்து விட்டால் அவர் குறித்து யாரும் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம் என்பது மாதிரியான நபர்கள் சற்று நிதானமாக தனது கருத்துக்களை சொல்ல வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது மாதிரி இருக்க கூடாது என்று எச்சரித்து, நாகரீகம் முக்கியம் என குறிப்பிட்ட கேஸ் ராதாகிருஷ்ணன், பானுமதி குறித்து முற்றிலும் அறிந்தவன் என்கிற முறையில் இவ் வதந்திகள் வெறும் வாயை மெல்லும் அவல் தான் என பதிவிட்டு, இறந்தவர்களின் மகத்தான செயலின் பொருட்டு நினைவு கூறுங்கள் என கேட்டுக்கொண்டு அரசியலிலும் கலைகளிலும் இருவரும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் என தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
#அண்ணா
— K.S.Radhakrishnan (@KSRadhakrish) September 24, 2023
#தசாவதானிபானுமதி #வாய்_புளித்ததோ_மாங்காய்_புளித்ததோ_என_பேசவேண்டாம்
•••••
சமீபத்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல் வெகு நாட்களாகவே மறைந்த முதல்வர் அண்ணா மற்றும் தசாவதானி பானுமதி இருவர் பற்றியும் உண்மைக்கு மாறாக, முரணான விதத்தில், தவறான கண்ணோட்டத்துடன் இங்கே பலரும்… pic.twitter.com/JoPGM6sbuG