நிசப்தமான சாலைகள்...கர்நாடகத்தை எதிர்த்து தமிழகத்தில் முழு அடைப்பு!!
தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
காவிரி விவகாரம்
காவிரி ஒழுங்கற்று வாரியம் தெரிவித்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தங்கள் மாநில விவசாயிகளின் நலனை தாங்கள் பாதுகாக்க வேண்டும் என கூறி பதிலடி கொடுத்தார்.
அம்மாநில சட்டமன்றத்திலும் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் கூறிய நிலையில், இன்று தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகள் மற்றும் பாஜகவைக் கண்டித்தும் இந்த போராட்டம் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெறுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
இப்போராட்டத்தின்போது, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர் என கூறப்படுகிறது.