அவர்களை திருமணம் செய்யக்கூடாது; மீறினால் கடும்.. பஞ்சாயத்தில் வினோத தீர்மானம்
கிராமம் ஒன்றில் திருமணம் குறித்த வினோத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருமணம்
பஞ்சாப், மான்சா மாவட்டத்தில் ஜவஹர்கே என்ற கிராமம் உள்ளது. இங்கு சமீபத்தில் பஞ்சாயத்து கூட்டம் நடந்துள்ளது.
அதில், வெளியில் இருந்து தங்கள் கிராமத்திற்கு வந்துள்ள வெளிநபர்கள் யாரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யக் கூடாது. அதையும் மீறி திருமணம் செய்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பஞ்சாயத்து நிர்வாகி சுக்செயின் சிங், “இந்த கிராமத்திற்கு அருகில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் வசித்துவருகிறார்கள். அவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். இதனால் போலீசார் எங்கள் கிராமவாசிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சிலரை கைதும் செய்கிறார்கள்.
பஞ்சாயத்து முடிவு
புலம்பெயர்ந்தவர்களுடன் எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது இயல்பு தான். ஆனால், இனி வரும் காலங்களில் அப்படி நடக்காது. மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எங்கள் கிராமத்தில் சுமார் 3,500 பேர் உள்ளனர்.
அவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் பிற மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள். இந்த தீர்மானம் புதிது ஒன்றும் கிடையாது. புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்கனவே எங்கள் கிராமத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.