இதல்லவா மாமியார்... மருமகனுக்கு 125 வகை உணவு விருந்துடன் செம கவனிப்பு!
வருங்கால மருமகனிற்கு 125 வகை உணவு வகைகளால் விருந்தளித்து மணமகள் குடும்பத்தினர் அசத்தியுள்ளனர்.
வருங்கால மருமகன்
ஆந்திரா, சிருங்கவரபுகோட்டா நகரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான கபுகந்தி சைதன்யாவுக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிஹாரிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் வரும் முதல் தசரா விருந்துக்கு மருமகனை வீட்டிற்கு அழைத்துள்ளனர், மணமகள் நிகாரிகா குடும்பத்தினர். இதனையடுத்து அவருக்கு 125 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
செம கவனிப்பு
இந்த ஏற்பாட்டைக் கண்ட சைதன்யா ஆச்சரியமடைந்தார். மேலும் இதுபோல் ஒரு மாபெரும் விருந்தை எதிர்பார்க்கவில்லை எனவும் உவகை தெரிவித்துள்ளார். இந்த விருந்தில் 95 வகை உணவுகள் வெளியில் இருந்து வாங்கியும்,
மற்றவை அனைத்தும் வீட்டில் செய்தும் என மொத்தம் 125 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்தச் செயல் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது