மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமை கிடையாது - கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

fatherinlaw SoInLaw Kerala High Court
By Irumporai Oct 05, 2021 10:14 AM GMT
Report

மாமனாரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அனுபவிக்கவோ, உரிமை கோரவோ மருமகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கேரள நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்தவர் ஹென்றி தாமஸ். இவருக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார். அவரை டேவிஸ் ரபேல் என்பவர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின்போது செயிண்ட் பால் தேவாலயம் சார்பில் பரிசுப் பத்திரத்தின் மூலம் டேவிஸ் ஹென்றியின் சொத்தை எழுதி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதை சாதகமாக பயன்படுத்தி, டேவிஸ் ரபேல் தனது மாமனாரின் சொத்தில் சட்டப்பூர்வ உரிமை கோரியுள்ளார்.. இதை எதிர்த்து ஹென்றி, பையனூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அதாவது தனது மருமகன் டேவிஸ் தனது சொத்துக்களில் அத்துமீறி நுழைவதற்கும் , சொத்து மற்றும் வீட்டின் உடைமைகளை அனுபவிப்பதற்கும், தலையிடுவதற்கும் நிரந்தர தடை உத்தரவு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது ஹென்றி தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், டேவிஸ் தனது சொந்த பணத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே கட்டியிருக்கிறார் என்றும், அவர் தனது வீட்டில்தான் வசித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

ஆகவே, அவருக்கு தன் சொத்தில் சட்டப்பூர்வ உரிமை கோர அனுமதி இல்லை எனவும் வாதிட்டார். டேவிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடும்பத்திற்காக தேவாலய அதிகாரிகளால் கூறப்பட்ட பரிசுப் பத்திரம் நிறைவேற்றப்பட்டதால், சொத்தின் தலைப்பே கேள்விக்குறியானது என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அனில் குமார், மாமனாரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அனுபவிக்கவோ, உரிமை கோரவோ மருமகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.