Gangster Couple: பிரபல தாதாவின் திருமணம்; கோட்டையான திருமண மஹால் - 200 போலீஸ் பாதுகாப்பு!
கேங்ஸ்டர் ஜோடியின் திருமண விழாவுக்கு 200 போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரமாண்ட திருமணம்
டெல்லியின் துவாரகா செக்டார்-3, சந்தோஷ் கார்டனில் உள்ள ஒரு பார்ட்டி ஹாலில் கேங்ஸ்டர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட சந்தீப் என்ற காலா ஜாதேடிக்கும், பெண் தாதாவான அனுராதா என்ற மேடம் மின்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புது மாப்பிள்ளையான சந்தீப்புக்கு திருமணத்தின்போது 6 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டிருந்தது. பரோலில் வரும் கேங்ஸ்டர் சந்தீப் தப்பிச் சென்றுவிடாதபடி போலீசார் தீவிரமாக
பார்ட்டி ஹாலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து, திருமணத்தில் பங்கேற்கும் அனைவரையும் பரிசோதனை செய்ய நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி பொறுத்தப்பட்டது. மேலும், ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டு, அப்பகுதி முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது.
இந்த திருமணவிழாவில் கலந்துக்கொள்ளும் 150 பேர் கொண்ட விருந்தினர்கள் பட்டியலை மணமக்களின் குடும்பத்தினர், காவல்துறையிடம் வழங்கி உள்ளனர். அவர்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே பார்ட்டி ஹாலுக்குள் அனுமதித்தனர். இவர்களது திருமண விழாவின் அலங்காரம் அந்த பார்ட்டி ஹாலை கிட்டத்தட்ட கோட்டை போன்று மாறியிருந்தது.