ஆர்டர் செய்த உணவில் 'கூல் லிப்' புகையிலை; குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு - அடுத்து நடந்தது?

Tamil nadu Coimbatore
By Jiyath Nov 17, 2023 07:07 AM GMT
Report

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் 'கூல் லிப்' எனப்படும் புகையிலை பொருள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவில் புகையிலை

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜாஸ்மின். இவர் நேற்று ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த உணவில்

பின்னர் ஜாஸ்மினும், அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென உணவில் டீ தூள் போன்ற பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டுள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது, அது கூல் லிப் எனப்படும் புகையிலை பொருள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட ஜாஸ்மினின் குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஜாஸ்மின் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த ஊழியர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர்.

காளீஸ்வரியின் நாடகம்; யோகா மாஸ்டருடன் உல்லாசம் - கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்!

காளீஸ்வரியின் நாடகம்; யோகா மாஸ்டருடன் உல்லாசம் - கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்!

ஹோட்டலுக்கு நோட்டீஸ்

அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்துள்ளது. இது தொடர்பாக ஜாஸ்மின் கூறியதாவது "உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயன்றேன்.

ஆர்டர் செய்த உணவில்

ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த தகவல் வெளியானதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்தனர்.

மேலும் வினியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், ஓட்டல் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.