ரூ.770 தவணை; மனைவியை தூக்கி சென்று வசூலித்த வங்கி ஊழியர் - மிரண்டுபோன கணவர்!

Crime Salem
By Swetha May 01, 2024 11:23 AM GMT
Report

கணவர் ரூ.770 கடன் தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர் மனைவியை சிறைபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரூ.770 தவணை 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஐடிஎஃப்சி என்ற தனியார் வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதந்தோறும் ரூ.770 தவணை தொகை செலுத்த வேண்டும்.

ரூ.770 தவணை; மனைவியை தூக்கி சென்று வசூலித்த வங்கி ஊழியர் - மிரண்டுபோன கணவர்! | Bank Employee Detaine Wife For Loan Due

இந்த நிலையில், பிரசாந்தால் இரண்டு வாரங்களுக்கு தவணை தொகை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கியின் ஊழியர் ஒருவர் தவணை தொகை செலுத்தாது தொடர்பாக பிரசாந்த்தை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.ஆனால் வேலை நிமித்தமாக போனை எடுக்கவில்லை.

உங்களுக்கே தெரியாமல் பேங்க் கணக்கில் ரூ.295 எடுக்குறாங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க..

உங்களுக்கே தெரியாமல் பேங்க் கணக்கில் ரூ.295 எடுக்குறாங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க..

வங்கி ஊழியர் 

இதையடுத்து துக்கியம்பாளையம் பகுதியில் உள்ள பிரசாந்த்தின் வீட்டிற்கு சென்ற சுபா மற்றும் வங்கி ஊழியர்கள் பிரசாந்தின் மனைவி கவுரி சங்கரியிடம் கடன் குறித்து கேட்டுள்ளனர். அப்போது அவர், கணவர் பணி முடிந்து வந்ததும் கேட்டு சொல்வதாக கூறியுள்ளார்.

ரூ.770 தவணை; மனைவியை தூக்கி சென்று வசூலித்த வங்கி ஊழியர் - மிரண்டுபோன கணவர்! | Bank Employee Detaine Wife For Loan Due

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத வங்கி ஊழியர்கள் சங்கரியை வங்கிக்கு அழைத்து வந்துபணத்தை கொடுத்து விட்டு கணவர் அழைத்துச்செல்லட்டும் என கூறியுள்ளனர் . இதனை அறிந்த பிரசாந்த் பணத்தை பிரட்டி கொண்டு வந்து தவணையை செலுத்தி தனது மனைவியை மீட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், எல்லை மீறி நடந்துகொண்ட வங்கி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.