ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடிவு..இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து - காய்நகர்த்தும் வங்கதேசம்!
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தாவிட்டால் இந்தியாவிற்கு எதிராக உலக நாடுகள் திரட்டுவோம் என வங்கதேசம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசம்
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த வன்முறை வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பக்கம் திரும்பியது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்த நிலையில் வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாகச் செயல்பட்டு வருகிறது.இந்த சூழலில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடிவு செய்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இதன் காரணமாக ஹசீனாவை ஒப்படைக்கக் கோரி முகமது யூனுஸ் தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.
தொடர்ந்து ஷேக் ஹசீனாவிற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கி வருவது மட்டுமில்லாமல் அவரது விசா காலத்தை நீடிப்பு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியா வங்க தேசத்திற்கு மறைமுகமாகப் பதில் அளித்துள்ளது.இந்த நிலையில் பாகிஸ்தான், துருக்கியுடன் வங்கதேசம் நட்பு பாராட்டி வருகிறது.
இதனால் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தாவிட்டால் இந்தியாவிற்கு எதிராக உலக நாடுகள் திரட்டுவோம் என வங்கதேசம் எச்சரிக்கை விடுத்துள்ளது.