முதல்ல உங்க மனைவி சேலையை எரிங்க; கொந்தளித்த பிரதமர் - என்ன காரணம்?
இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷத்தை பிரதமர் ஷேக் ஹசினா கண்டித்துள்ளார்.
#BoycottIndia
வங்காளதேசத்தில் பிரதமராக இருக்கிறார் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசினா. நீண்ட காலம் பிரதமராக ஆட்சி செய்யும் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்திய பொருட்களை வங்காளதேசம் இறக்குமதி செய்து தினசரி பயன்பாட்டில் உபயோகித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருக்கும் பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி கடந்த சில காலங்களாகவே இந்தியாவையும் இந்திய பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோஷத்தை எழுப்பி வருகிறது.
பிரதமர் கொதிப்பு
மேலும், சமூக வலைத்தளங்களில் #BoycottIndia என்கிற ஹேஷ்டாகையும் பயன்படுத்தி வந்தது. தற்போது இதுகுறித்து பேசியுள்ள பிரதமர் ஹாசினா, "இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என சொல்லுபவர்கள் இந்திய மசாலா பொருட்கள் இல்லாமல் சாப்பிட முடியுமா?
Boycott India என கூறுபவர்களின் மனைவிகளிடம் இந்திய புடவைகள் இருக்கிறதா என கேட்க வேண்டும்.
ஒரு வேலை மனைவிகளிடம் இந்திய புடவைகள் இருந்தால் அதனை பிடிங்க எரித்துவிடுங்கள் பார்ப்போம்" எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.