சிறுவயதிலேயே இசான் கிஷன் திறமை பார்த்து கணித்த தோனி... - என்ன சொன்னாருன்னு தெரியுமா..?
சிறுவயதிலேயே இந்திய கிரிக்கெட் வீரர் இசான் கிஷன் திறமையை முன்னாள் கேப்டன் தோனி கணித்து கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
சாதனைப் படைத்த இசான் கிஷன் -
நேற்று இந்தியா - வங்காளதேசம் அணிகள் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் முதலில் இந்திய அணி சார்பாக பேட்டிங் செய்ய வந்த இளம் வீரர் இஷன் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கப்பட்டார்.
ஆரம்பம் முதலே மாஸாக விளையாடிய இவர் அதிவேகமாக இரட்டை சதம் (200) அடித்து அசத்தினார். இவர் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து மாஸ் காட்டினார். இதனையடுத்து இவர் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அப்பவே கணித்த தோனி -
சாதனை புரிந்த இசான் கிஷன் திறமையை சிறுவயதிலேயே முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கணித்துள்ளார்.
அதாவது, பயிற்சியாளர் உட்டம் மஜும்தர், சிறுவயதான இஷான் கிஷன் செய்த பயிற்சி குறித்து கேப்டன் தோனியிடம் தெரிவித்துள்ளர்.
அப்போது, அதைக் கேட்ட தோனி, நானும் இஷான் கிஷன் ஆட்டத்தை பார்த்துள்ளேன். இது போன்ற திறமை வாய்ந்த வீரர் இந்திய அணிக்காக விளையாடாமல் போனால் அது அவருடைய திறமைக்கு செய்யும் அநீதியாகும் என்று பயிற்சியாளரிடம் கூறியுள்ளார்.