எம்.பி. ஆன பிரபல கிரிக்கெட் வீரர்; தொடர் சர்ச்சை - ரசிகருக்கு கன்னத்தில் பளார்!
ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்றுள்ளார்.
ஷாகிப் அல் ஹசன்
வங்காளதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன். இவர் தற்போது அரசியலில் களமிறங்கி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட்டார்.
மேற்கு நகரமான மகுரா தொகுதியில் போட்டியிட்ட ஷாகிப் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் வெற்றி பெறுவதற்காகவே முன்னதாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வை அறிவித்திருந்தார்.

கிரிக்கெட்டுக்கு bye..? MP சீட்க்கு ஹாய்..!! அரசியலுக்கு தயாரான முன்னாள் KKR வீரர்..குவியும் விமர்சனங்கள்..!
சர்ச்சை சம்பவம்
தொடர்ந்து, விரைவில் எம்.பி ஆக பதவியேற்க ஷாகிப் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஷாகிப் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே வந்தார்.
Shakib Al Hasan slapped a fanpic.twitter.com/oJrnWlfpDw
— Don Cricket ? (@doncricket_) January 8, 2024
அப்போது அவருக்குப் பின்னால் வந்த ஒரு ரசிகர் அவரை தள்ளியதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்தவர், ரசிகரை ஒரு அறைவிட்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.