ஷகிப் அல் ஹசன் இலங்கை வந்த கல்லால அடிப்பாங்க..!! எச்சரித்த ஏஞ்சலோ மேத்யூஸ் சகோதரர்!!
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏஞ்சலோ மேத்யூஸ்'ஸுக்கு சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுத்ததற்கு இலங்கை ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்
Timed Out முறையில் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு இலங்கையை சேர்ந்த பல ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை சமூகவலைத்தளங்ளைல் வெளிப்படுத்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் தான் நேரம் தவறாமல் மைதானத்திற்குள் வந்து விட்டதாக வீடியோ ஆதாரங்களையும் கிரிக்கெட் சம்மேளனத்திடம் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

"ஒரே ஆள் - போர்கண்ட சிங்கமாய் களத்தில் நின்ற மேக்ஸ்வெல்"!! கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஆட்டம்!!
இருப்பினும் இது தொடர்ந்து சர்ச்சையாகவே நீடித்து வருகின்றது. இந்நிலையில் தான் ஏஞ்சலோ மேத்யூஸ்'ஸின் சகோதரர் அளித்த பேட்டியில் ஷகிப் அல் ஹசனுக்கு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் வங்கதேச கேப்டன் நேர்மை தன்மையையும் மனிதாபிமானத்தையும் காட்டவில்லை.
அதனால் ஷாகிப்பை இலங்கை வரவேற்கவில்லை. வருங்காலங்களில் எல்பிஎல் அல்லது சர்வதேச போட்டிகளுக்காக இலங்கைக்கு விளையாட வந்தால் அவர் மீது கற்கள் பாயும் அல்லது ரசிகர்களிடம் மோசமான நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள நேரிடலாம்” என்று கூறினார்.