லுங்கி அணிந்து சென்றதால் டிக்கெட் தர மறுத்த திரையரங்கம்.. வைரலான வீடியோ!

Viral Video Bangladesh
By Sumathi Aug 06, 2022 07:07 AM GMT
Report

மல்டிபிளக்ஸ் திரையரங்கில், லுங்கி அணிந்து சென்றவருக்கு திரையரங்கு நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

லுங்கிக்கு மறுப்பு

வங்காளதேசம், டாக்காவில் செயல்பட்டு வரும் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில், ஒருவர் லுங்கி அணிந்து சினிமா பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய ஆடை சரிவர இல்லாததால், அவருக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலானது.

லுங்கி அணிந்து சென்றதால் டிக்கெட் தர மறுத்த திரையரங்கம்.. வைரலான வீடியோ! | Bangladesh Man In Lungi Denied Ticket Multiplex

அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், "நான் லுங்கி அணிந்து சென்றதால் தியேட்டர் நிர்வாகம் எனக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டது" என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பலர் லுங்கி அணிந்து திரையரங்குகளுக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

 ஸ்டார் சினிபிளக்ஸ்

இதனையடுத்து ஸ்டார் சினிபிளக்ஸ் திரையரங்க நிர்வாகம், சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் எதன் அடிப்படையிலும் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

லுங்கி அணிந்து சென்றதால் டிக்கெட் தர மறுத்த திரையரங்கம்.. வைரலான வீடியோ! | Bangladesh Man In Lungi Denied Ticket Multiplex

ஒரு நபர் லுங்கி அணிந்திருப்பதால், அவருக்கு டிக்கெட் வழங்கும் உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை. எங்கள் திரையரங்குகளில் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை அனுபவிக்க அனைவரும் வருமாறு வரவேற்கிறோம்.

நிர்வாகம் விளக்கம் 

இந்த சம்பவம் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இப்படியொரு சம்பவம் நடைபெற்றதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், அதனை எங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு பதிவிட்டுள்ளது. அதன்பின்னர், அந்த திரையரங்க நிர்வாகம் பாதிக்கப்பட்ட நபரான சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே மல்டிபிளக்ஸ் திரையரங்கில் படம் பார்க்க அழைத்து, அவருடன் நிற்கும் புகைப்படங்களை அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.