உச்சநீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு - இயல்பு நிலைக்கு திரும்பிய வங்கதேசம்!
இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீட்டில் முறைகேடு
வங்காளதேசம், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும்,

இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் 30 சதவீத இடஒதுக்கிட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
ஓய்ந்த போராட்டம்
இந்த போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளன. தொடரும் வன்முறையில் இதுவரை குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு போலீசார் திணறி வருகிறது. மேலும், ராணுவமும் கூட களமிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அரசு வேலைகளில் 93 சதவீத பணியிடங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து வங்கதேசத்தில் முன்னதாக வெடித்த வன்முறை தற்போது முடிவடைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்! IBC Tamil
ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப் IBC Tamil