பள்ளி மீது விழுந்து நொறுங்கிய விமானம் - 19 பேர் பலி!
போர் விமானம் பள்ளி மீது விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
போர் விமான விபத்து
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் அருகே இருக்கும் உதரா பகுதியில் அந்நாட்டின் F-7BGI போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, அந்தப் பகுதியில் ஒருங்கிணைந்து இயங்கிவரும் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தின் மீது திடீரென போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
19 பேர் பலி
இந்நிலையில், இன்று சீன J-7 போர் விமானத்தின் அடுத்தகட்ட போர் விமானமான F-7BGI பயிற்சியில் இருந்தது. அப்போது திடீரென அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை மீறி பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தின் மீது விழுந்து நொறுங்கியது.
இதில், தற்போதுவரை போர் விமானத்தின் விமானி லெப்டினன்ட் முகமது துக்கிர் இஸ்லாம் உட்பட 19 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 100க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வளாகத்தில் சுமார் 2,000 மாணவர்கள் வரை படித்துவருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.