தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி - என்ன காரணம்?
Kerala
Virus
Death
By Sumathi
தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தெருநாய் தொல்லை
கேரளாவில் நாய்க்கடியால் தினமும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மலப்புரத்தில் 6 வயது சிறுமியை தெருநாய் கடித்துக் குதறி உயிரிழந்தார்.
எனவே தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்,
அரசு அனுமதி
நோய் பாதித்த மற்றும் தொற்று நோய்களை பரப்பக்கூடிய தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தெருநாய்க்கடி சம்பவங்களால் ரேபிஸ் தொற்று அதிகரித்து வருவதால், கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்று கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.