பங்காரு அடிகளார் மறைவு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Tamil nadu
By Sumathi Oct 20, 2023 03:20 AM GMT
Report

மதுராந்தகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளார் மறைவு 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை வைத்து அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வந்தார்.

பங்காரு அடிகளார் மறைவு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Bangaru Adigalar Passed Away School Leave

ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர்.

வேட்பாளராக களமிறங்கும் பங்காரு அடிகளார் மனைவி - சொத்துமதிப்பு இவ்வளவா...?

வேட்பாளராக களமிறங்கும் பங்காரு அடிகளார் மனைவி - சொத்துமதிப்பு இவ்வளவா...?

விடுமுறை

இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்நிலையில், இவர் ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

பங்காரு அடிகளார் மறைவு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Bangaru Adigalar Passed Away School Leave

தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால், இன்று (20.10.2023) மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.