2 வருஷத்திற்கு முன்பே தனக்கு சமாதி கட்டிய பங்காரு அடிகளார் - கலங்கும் பக்தர்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பங்காரு அடிகளார், தனக்கு தானே சமாதி கட்டியுள்ளார்.
பங்காரு அடிகளார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார்(82). அங்கு இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர். முன்னதாக, கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
தனக்கு தானே சமாதி
இந்நிலையில், நேற்று காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும், ஆன்மீகவாதிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது மரணத்தை உணர்ந்த பங்காரு அடிகளார், மேல்மருவத்தூரில் தனக்கு தானே சமாதி கட்டியுள்ளார். அங்கு தான் தற்போது அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.