உலகில் வளர்ந்து வரும் நகரம் - லண்டனை முந்திய நம்ம பெங்களூர்!
உலகில் வளர்ந்து வரும் நகரங்களில் பெங்களூர் இடம்பிடித்துள்ளது.
வளர்ந்து வரும் நகரம்
பொருளாதார நிறுவனமான Oxford Economics ஆய்வின் படி, 2023 ஆம் ஆண்டில் வளர்ச்சியின் அடிப்படையில் ஆசிய பசிபிக் மற்றும் இந்திய நகரங்களை விட தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூரு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023 ஆம் ஆண்டில் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளரும் நகரமாக இருக்கும். அதைத் தொடர்ந்து ஹைதராபாத் இரண்டாம் இடம் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர்
இரண்டு தென்னிந்திய நகரங்களும் உற்பத்தித் துறையில் பல முதலீடுகளை ஈர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு மற்றும் லண்டனுக்குப் பின்னால், வேகமாக வளர்ந்து வரும் மற்ற தொழில்நுட்ப மையங்களில் இரண்டு ஜெர்மன் நகரங்களான மியூனிக் மற்றும் பெர்லின் மற்றும் பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் ஆகியவை இடம் பிடித்துள்ளன.
மும்பை உலக அளவில் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ளது.