பெங்களூருவில் பாஜக தொடர்ந்து வழக்கு - நேரில் ஆஜரான ராகுல்!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!
பாஜக தொடுத்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பெங்களூரு உய்ரநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பாஜகவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விளம்பரங்களில் பாஜக அரசாங்கத்திற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தவறான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
"ஊழல் விகித அட்டை" என்ற தலைப்பில் வெளியான விளம்பரங்களில், பாஜகவின் பசவராஜ் பொம்மை அரசு "40 சதவீத கமிஷன் சர்க்காரா" (அரசாங்கம்) என்று குற்றம் சாட்டியது கர்நாடக காங்கிரஸ்.
மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் அப்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சித்தராமையா ஆகியோர் மூலம் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
இந்த விளம்பரங்களில் ஒன்றை ராகுல் காந்தி தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார்.இந்த வழக்கில், ஜூன் 1ஆம் தேதி, தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஜூன் 7ஆம் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, இவ்வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகினர். அவருக்கு டி.கே.சுரேஷின் பாதுகாப்பில் ஜாமீன் வழங்கி, வழக்கு அடுத்த விசாரணைக்கு ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.