தகாத உறவில் மருமகள்; கண்டித்த மாமியார் - கள்ளக்காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்!

Bengaluru Crime
By Sumathi Oct 19, 2023 04:54 AM GMT
Report

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள், மாமியாரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு 

பெங்களூரு, பட்டரஹள்ளியைச் சேர்ந்தவர் லட்சுமம்மா(50). இவரது மகன் மஞ்சுநாத். மருமகள் ராஷ்மி. இந்நிலையில், லட்சுமம்மா குளியல் அறையில் மயங்கிக் கிடந்துள்ளார்.

தகாத உறவில் மருமகள்; கண்டித்த மாமியார் - கள்ளக்காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்! | Bangalore Daughter In Law Affair Mother In Law

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அங்கி பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, அவரது சொந்த கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடந்துள்ளன.

மருமகள் போட்ட ஸ்கெட்ச்

தொடர்ந்து, சில தினங்களுக்குப்பின் லட்சுமம்மா வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த அக் ஷய்யும், ராஷ்மியும் பேசிக் கொண்டிருந்ததை மற்றொரு வாடகை வீட்டார் பார்த்துள்ளார். மேலும் அவரது கணவர் மஞ்சுநாத்திடமும் கூறியுள்ளார். அதன்பின், மனைவியின் மொபைலில் வாட்ஸ் ஆப்பை செக் செய்துள்ளார்.

தகாத உறவில் மருமகள்; கண்டித்த மாமியார் - கள்ளக்காதலனுடன் போட்ட ஸ்கெட்ச்! | Bangalore Daughter In Law Affair Mother In Law

அதன்மூலம் ராஷ்மிக்கும், அக் ஷய்க்கும் கள்ளதொடர்பு இருப்பதும், தாய் இறப்புக்கு அவர்கள் தான் காரணம் என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து கணவர் போலீஸில் புகாரளித்ததையடுத்து, ராஷ்மி, அக்‌ஷய் மற்றும் அவரது நண்பர் புருஷோத்தம் என்பவர் கைது செய்யப்பட்டனர்.

மாமியார் கொலை

விசாரணையில், லட்சுமம்மாவுக்கும், ராஷ்மிக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும், வாடகைப் பணம், பொருளாதார தேவை என அனைத்தையும் மாமியார் பார்த்து வந்ததால் ராஷ்மி ஆத்திரமடைந்துள்ளார்.

கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவம்; 250 நண்பர்களுக்கு மது விருந்து வைத்த கணவன் - Video வைரல்!

கள்ளக்காதலனுடன் மனைவி செய்த சம்பவம்; 250 நண்பர்களுக்கு மது விருந்து வைத்த கணவன் - Video வைரல்!

இதனால் அவரை அக் ஷய், அவரது நண்பர் புருஷோத்தம் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்பின், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் லட்சுமம்மாவுக்கு பாலில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது.