பெங்களூரு வெடிவிபத்து - குற்றவாளி கைது..? தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி
பெங்களூரு தனியார் உணவகத்தில் வெடிகுண்டு வெடித்த விவகாரத்தில் சந்தேகத்திற்கு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் கஃபே
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே ஒயிட் லீட் கிளை 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது.
இந்த உணவகத்தில் தினமும் பல நூறுகணக்கான மக்கள் வந்து செல்வர். இந்த உணவகத்தில் அண்மையில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்து நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக தற்போது தீவிரமான விசாரணையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஈடுபட்டனர்.
கைது
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மர்மநபர் ஒருவரின் புகைப்படம், அவர் இருக்கும் CCTV footage மற்றும் அவரை குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் போன்றவையும் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான், தற்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மர்மநபர் ஒருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.