சிறுமியிடம் அத்துமீறிய 73 வயது முதியவர் அடித்துக் கொலை!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பெங்களூர், ஹென்னுர் பகுதியில் வசித்து வந்தவர் குப்பண்ணா(73). இவர் அந்தப் பகுதியில் கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், துணி காயப்போடச் சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது வீட்டுக்கு குப்பண்ணா அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் வீட்டுக்கு சிறுமி வராததால் பெற்றோர் அவரை தேடியுள்ளனர். அப்போது அந்த முதியவரின் வீட்டில் நிர்வாணமாக இருந்த சிறுமியை கண்டுப்பிடித்ததாக தெரிகிறது. அந்தச் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து,
முதியவர் கொலை
அவரிடம் அத்துமீறியிருக்கலாம் என்று சந்தேகித்த குடும்பத்தினர் முதியவரை தாக்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீஸார் முதியவரின் வீட்டிற்கு சென்று பார்த்ததில் அவர் இறந்து கிடந்துள்ளார்.
இதனால், அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.