Thursday, May 1, 2025

அமைச்சர் ரோஜா ஒரு ஐட்டம் குயின் - காங்கிரஸ்'ஸின் கீழ்த்தரமான விமர்சனம்

Roja Andhra Pradesh YS Jagan Mohan Reddy Telangana
By Karthick a year ago
Report

 ஆந்திர அமைச்சர் ரோஜாவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்ட்லா கணேஷ் ஐட்டம் குயின் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ரோஜா மீது விமர்சனம்

ஆந்திர மாநிலத்தின் சுற்றுசூழல் துறை அமைச்சராக ஆளும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கின்றார் முன்னாள் நடிகையான ரோஜா.

bandla-ganesh-calls-roja-a-item-queen-diamond-rani

அவர் மீது தொடர்ந்து விமர்சனத்திற்குரிய கருத்துக்கள் எதிர்கட்சியினரால் வைக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் சந்திரபாபு நாயுடு கைதான போது தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவதூறு பரப்பும் விதமாக அமைச்சர் ரோஜா ஆபாசப் படத்தில் நடித்ததாக பேசியிருந்தார்.

ஐட்டம் குயின்

இது பெரும் புகைச்சலை ஆந்திர அரசியலில் ஏற்படுத்தியதை அடுத்து தற்போது அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.

இது வெறும் ட்ரைலர் தான்...ரோஜாவின் மொத்த ஆபாச படமும் வரும்..மீண்டும் மிரட்டும் எதிர்க்கட்சி

இது வெறும் ட்ரைலர் தான்...ரோஜாவின் மொத்த ஆபாச படமும் வரும்..மீண்டும் மிரட்டும் எதிர்க்கட்சி

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டியுடன் நெருங்கிய உறவில் இருக்கும் தயாரிப்பாளரும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான பண்ட்லா கணேஷ் ரோஜாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

bandla-ganesh-calls-roja-a-item-queen-diamond-rani

ரேவந்த் ரெட்டியை ஜாக்பாட் முதல்வர் என்று வர்ணித்த ரோஜாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரோஜாவை "ஐட்டம் குயின்" என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும் ரோஜாவை, "வைர ராணி" என்றும், அவரது கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் தான் தற்செயலான முதல்வர் என்ற பண்ட்ல கணேஷ், ரேவந்த் ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று குறிப்பிட்டார்.