கைக்கொடுத்த வாழைப்பழம்? செஸ் உலக கோப்பையை இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வென்றது எப்படி!
இந்தியாவின் திவ்யா தேஷ்முக் செஸ் உலக கோப்பையை வென்றுள்ளார்.
திவ்யா தேஷ்முக்
ஜார்ஜியாவில் மகளிருக்கான உலக கோப்பை செஸ் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதில் 46 நாடுகளை சேரந்த 107 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனைகள் கோனெரு ஹம்பி- திவ்யா தேஷ்முக் ஆகியோர் தகுதி பெற்றனர். முதல் ஆட்டம் டிரா ஆனது. இதனால் கிளாசிக் முறையிலான 2வது ஆட்டம் நடந்தது. இந்த போட்டியும் டிராவானது.
பின் டைபிரேக்கர் முறையில் கோனெரு ஹம்பியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் செஸ் போட்டியின்போது தனது அருகே வாழைப்பழத்தை வைத்து கொள்வார்.
வாழைப்பழ சென்டிமெண்ட்
அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடாமல் இருப்பார். இவ்வாறு தொடப்படாத வாழைப்பழம் பலமுறை அவருக்கு அதிர்ஷ்டத்தை தந்துள்ளதாம்..
அந்த வகையில் டைபிரேக்கர் போட்டியிலும் அவர் கொண்டு சென்ற வாழைப்பழத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்தார். பல வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு என்று ஒரு சென்டிமென்ட்டை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.