கணவரை பிரிந்த சாய்னா - முடிவுக்கு வந்த 7 ஆண்டு திருமண வாழ்க்கை!
சாய்னா நேவால், கணவர் காஷ்யப்பை விட்டுப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
சாய்னா நேவால்
நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால். கடந்த 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்றிருந்தார்.
2018 ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலம் வென்றார். கமன்வெல்த் போட்டிகளில் இரு தங்கத்தை வென்றுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். இருவருமே ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் காஷ்யப் தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில், திருமண வாழ்க்கையில் இருந்து விலகவுள்ளதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
விவாகரத்து அறிவிப்பு
"வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு, காஷ்யப் பருபள்ளியும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த நேரத்தில் எதிர்காலம் சிறப்பாக அமையும் என மட்டும் யோசிக்கிறேன்.
இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் புரிந்து கொண்டு மதிப்பளித்ததற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். சாய்னா கடைசியாக ஜூன் 2023இல் பேட்மிண்டன் போட்டிகளில் விளையாடினார்.
அதன் பிறகு அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இருப்பினும் இன்னும் தனது ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.