எல்லை மீறும் தலிபான் அரசு .. ஆப்கானிஸ்தானில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை - இதுதான் காரணம்!
ஆப்கானிஸ்தானில் வீடுகளில் ஜன்னல் வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நெருங்கிய ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் செல்லக் கூடாது.
பெண்களை பொது இடங்களில் முகத்தை மறைக்க வேண்டும்.பொதுவெளியில் பெண்கள் சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மெல்லிய குட்டையான இறுக்கமான ஆடை அணியக் கூடாது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் பெண்கள் அவர்களின் வீடுகளுக்குள்ளும் பாடவோ, சத்தமாக வாசிக்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஆப்கானிஸ்தானில் வீடுகளில் ஜன்னல் வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஜன்னல் வைக்க தடை
இது குறித்து அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் கூறுகையில் ,சமையல் அறைகளில் , முற்றங்களில் வேலை செய்யும் பெண்களைப் பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கெனவே உள்ள வீடுகளில் உள்ள ஜன்னல்கள் இருந்தால் அதனை அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இனி புதிய கட்டிடங்கள் கட்டும் போது ஜன்னல்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.