இந்திய பெண்ணை திருமணம் செய்த இலங்கை நபர் - நாடு கடத்த திட்டம்?

Tamil nadu Tourist Visa Madras High Court
By Vidhya Senthil Oct 02, 2024 05:38 AM GMT
Report

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவருக்கான விசா நீட்டிப்பு தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

  விசா நீட்டிப்பு

இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், என்பவர் கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். அப்போது ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த சிவசக்தியைச் சந்து பேசி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

law

இதனையடுத்து விசா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் , இலங்கையைச் சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம் செய்ய முடிவு செய்தேன்.

10 ஆண்டுகளாக இந்தியாவில் பாகிஸ்தானியர் செய்த செயல் - அதிரவைத்த சம்பவம்!

10 ஆண்டுகளாக இந்தியாவில் பாகிஸ்தானியர் செய்த செயல் - அதிரவைத்த சம்பவம்!

ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தைப் பதிவு செய்யமுடியவில்லை. இந்நிலையில், எனது 3 மாத விசா காலம் முடிவடைந்ததால், காலநீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன்.

 உயர் நீதிமன்றம்

ஆனால், எனது திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து,எனது விசா காலத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

visa

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவருக்கான விசா நீட்டிப்பு தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, மனுதாரருக்கு முறையாகத் திருமணம் நடைபெற்றதா என்பதை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து, விசா நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் அதுவரை மனுதாரரை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது” எனத் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.