இனி பப்ளிக்கில் முகத்தை மறைக்கும் உடை அணியக்கூடாது - சட்டம் அமல்!
பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடையை அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டுமென பெரும்பாலானோர்(51 %) ஆதரவு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இதுதொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
மீறினால் அபராதம்
அதன்படி, பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிந்து செல்லும் நபர்களுக்கு அபராதம் 100 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாய்) விதிக்கப்படவுள்ளது. அபராத தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் 1000 பிரன்சிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 1 லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்.
மேலும், விமானங்கள், தூதரகங்கள், மதவழிபாட்டு தலங்கள், முகத்தை மறைக்காவிட்டால் உடல்நல ரீதியில் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில் இந்த சட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.