6 ஆண்டுகள் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு - நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
நாட்டின் பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மக்களவை தேர்தல்
நாட்டின் அடுத்த ஆளும் அரசை தேர்வு செய்யும் மக்களவை தேர்தல் மிக தீவிரமாக நடந்து வருகின்றது. இது வரை 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில், வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.
அடுத்த கட்டமாக வரும் மே 7-ஆம் தேதி மொத்தமாக 95 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. நாட்டின் அநேக தலைவர்கள் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 10 ஆண்டு ஆட்சியை தொடர்ந்து மீண்டும் ஆட்சியை பிடித்திட பாஜக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நாட்டின் பிரதமர் மோடி, நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். அவர், அண்மையில் பிரச்சார கூட்டம் ஒன்றில், மதத்தை குறித்து பேசியதாக கடும் விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர்.
இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இம்மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.