பிரபல ஓடிடி; சிறுமிகளை கூட விடாமல்.. ஆபாச வெப்சீரிஸ் - தடை செய்ய வலுக்கும் கண்டனம்!
ஆல்ட் பாலாஜி ஓடிடி தளத்தை தடை செய்ய மக்கல் வலுவான கோரிக்கையை வைத்துள்ளனர்.
பிரபல ஓடிடி
இந்தி திரையுலகின் முன்னணி பெண் தயாரிப்பாளராக இருப்பவர் ஏக்தா கபூர். இவர் பிரபல இந்தி நடிகர் ஜிதேந்திரா, ஷோபா கபூர் ஆகியோரின் மகள் ஆவார். ஏக்தா கபூர் தயாரிப்பு மட்டுமல்லாது ஏ.எல்.டி என்ற ஓ.டி.டி. தளத்தையும் நடத்தி வருகின்றனர்.
இந்த ஓ.டி.டி.யில் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் தயாரித்த ‘காந்தி பாத்’ என்ற ஆபாச வெப் தொடர் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் 7வது சீசன் கடந்த ஆண்டு வெளியானது.
இந்த நிலையில், அந்த தொடரில் 18 வயதிற்கு கீழ் உள்ள நடிகையின் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 20ஆம் தேதி மும்பை எம்.ஹெச்.பி. காலனி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ்
வெப்சீரிஸ்
தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சிகரெட் மற்றும் மது தொடர்பான காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசம் இடம்பெறாததால் அது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூரிடம் காவல் துறையினர் கேள்விகள் கேட்டு, அடுத்த கட்ட விசாரணை வருகிற 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்று ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் நிறுவனம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஷோபா கபூர் மற்றும் ஏக்தா கபூர் நிறுவனங்களின் தினசரி செயல்பாடுகளில்
ஈடுபடுவதில்லை என்றும் எல்லாத்துக்கும் தனித்தனியே குழுக்கள் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனம் சார்பில் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.