இளைஞரை மிரட்டி ஆபாச வெப்சீரிஸில் நடிக்க வைத்த பெண் இயக்குநர் - அதிர்ச்சி தகவல்
ஆபாச படத்தில் நிர்வாணமாக நடிக்கச் சொல்லி மிரட்டியதாக இளைஞர், பெண் இயக்குநர் மீது புகாரளித்துள்ளார்.
ஆபாச படம்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மலையாள சினிமா இயக்குநர் லட்சுமி தீப்தா. நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற அந்தரங்க காட்சிகள் நிறைந்த 18+ வெப் சீரிஸ்களை அதிகமாக இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் வெங்கானூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், `இயக்குநர் லட்சுமி தீப்தா தனக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.
சிக்கிய பெண் இயக்குநர்
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அருவிக்கரையில் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிலகாட்சிகளைக்கூறி நடிக்கும்படி கூறி, அதை கேமராவில் ஷூட் செய்தனர்.

பின்னர், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று, தன்னை ஆபாசமாக நடிக்க வைத்தார்'' என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இயக்குநரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan