விஜய் கருப்பா இருப்பார்; இவரோடு நடிக்கணுமா?தலையெழுத்துன்னு..நடிகை பாலாம்பிகா!

Vijay Tamil Cinema
By Swetha Sep 05, 2024 10:30 AM GMT
Report

நாளைய தீர்ப்பு படத்தில் நடிக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை என நடிகை பாலாம்பிகா கூறியுள்ளார்.

பாலாம்பிகா

பிரபல நடிகையான பாலாம்பிகா ஒரு தனியார் சேனலுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், நாளையத்தீர்ப்பு படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ்ஸானது குறித்து பேசியிருப்பார். அப்போது அவர், “உண்மையில் நாளைய தீர்ப்பு படத்தில் நான் நடித்திருக்கலாம்.

விஜய் கருப்பா இருப்பார்; இவரோடு நடிக்கணுமா?தலையெழுத்துன்னு..நடிகை பாலாம்பிகா! | Balambika Latest Interview About Naalaiya Theerpu

ஆனால் எனக்குதான் அது கொடுத்து வைக்கவில்லை. பிராப்தம் என்ற ஒன்று இருக்கிறது. அது எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில், சில விஷயங்களில், எல்லாவற்றிற்கும் நாம் ஒத்துச்சென்றும் செல்ல முடியாது.ஆனால், இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அந்தப்படத்தில் நடித்திருக்கலாம் என்று. ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் விஜயுடன் நான் நடித்திருந்தால், இன்று என்னுடைய பெயர் உலகம் முழுக்க தெரிந்து இருக்கும். உண்மையில் அந்த படம் எனக்கு உறுதியாகிவிட்டது. ஹாஃப் சாரியில் விஜயின் அப்பாவான எஸ் ஏசி சார் ஆடிஷனுக்காக என்னை அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.

பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!

பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!

விஜய் கருப்பா..

அவரின் படம் எனக்கு கிடைத்துவிட்டது என்றவுடன் எனக்கு உள்ளூர மிகப் பெரிய சந்தோஷம் வந்து விட்டது. இதையடுத்து நான் அவரை சென்று பார்த்தேன். அப்போது அவர் அங்கு விஜயை வரவழைத்து, முதன்முறையாக, இவர் தான் என்னுடைய மகன். படத்தின் ஹீரோ என்றார்.

விஜய் கருப்பா இருப்பார்; இவரோடு நடிக்கணுமா?தலையெழுத்துன்னு..நடிகை பாலாம்பிகா! | Balambika Latest Interview About Naalaiya Theerpu

அப்போது நான் மிகவும் வெள்ளையாக அழகாக,க்யூட்டாக இருப்பேன்.அப்படி இருந்த எனக்கு, விஜயை பார்த்த பொழுது, நமக்கு இவன் ஜோடியா என்று நினைத்தேன். இருப்பினும், பரவாயில்லை, எஸ் ஏ சி சார் படத்தில் நடிக்கிறோம் அல்லவா? அது போதும் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்போது விஜய் அவ்வளவு அழகெல்லாம் கிடையாது. ஃபங்கு வைத்திருப்பார் இப்போது போல அவர் கலர் கிடையாது. கருப்பாக, ஒரு மாதிரி மாநிறமாகத்தான் இருப்பார். எனக்குள் நான், இவர் உடனெல்லாம் நடிக்க வேண்டுமா..?

தலை எழுத்து என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் இப்போது நான் வருத்தப்படுகிறேன் நாம் அவருடன் நடித்திருந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். சில காரணங்களால் நான் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.” என்று தெரிவித்துள்ளர்.