நடிகைளிடம் சேட்டை செய்யும் பாலைய்யா...அதுக்காக நயன்தாராவை காலில் விழவைத்தாரா? பிரபலம் பகீர்!!
நடிகர் பாலகிருஷ்ணா அண்மையில் நடிகை அஞ்சலியை மேடையில் தள்ளிவிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
பாலகிருஷ்ணா
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமாக நடிகராக இருக்கின்றார் பாலகிருஷ்ணா. அவரின் படங்களில் வெற்றியை விட படத்தில் அவரின் ஆக்ஷன் கட்சிகள் மிக பிரபலம்.
தெலுங்குவை தாண்டி மற்ற பிற மொழிகளிலும் அவர் பிரபலமாக காரணமும் இதுவே. அதே போல, அவ்வப்போது பொதுவெளியில் தனது கோபத்தை வெளிப்படுத்தி மாட்டிக்கொண்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அஞ்சலி சம்பவம்
இப்படி அவரை குறித்து பேசி வரும் சூழலில், அண்மையில் தெலுங்கு படமான "gangs of godavari" படத்தின் Pre-release நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பாலகிருஷ்ணா.
அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஞ்சலி மேடையில் நின்றிருந்த போது, அதே ஒரு விஷயத்தை கூறி, அஞ்சலிய தள்ளிவிட்டார் பாலகிருஷ்ணா. இந்த வீடியோ வைரலானது. அவருக்கு கடும் கண்டங்களும் எழுந்தன.
நயன்தாராக்கு நடந்த சம்பவம்
இந்நிலையில், சினிமா விமர்சகர் அந்தணன் அளித்துள்ள பேட்டியில், நடிகைகளிடம் எல்லைமீறி பாலகிருஷ்ணா நடந்து கொள்கிறார் என்கிறார்கள். ஆனால், நயன்தாரா அவருடன் இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் நடந்ததே இல்லை. பாலையாவை பொறுத்தவரை தன்னை மதித்து நடந்துகொள்ள வேண்டும். படப்பிடிப்பு சென்றவுடன் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டால் அத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது.
அதன்பின் அவரால் எந்த ஒரு டார்ச்சரும் இருக்காது. நீங்கள் நிம்தியாக அவருடன் நடித்துவிட்டு வந்துவிடலாம்" என பேசியுள்ளார்.