காலருகே சரக்கு பாட்டில்..மது போதையில் அஞ்சலியிடம் அத்துமீறிய பாலைய்யா - அதிர்ந்த ரசிகர்கள்!!
நடிகர் பாலகிருஷ்ணா தனது அடாவடி தனத்தால் விமர்சனங்களை பெற்று வருகின்றார்.
நந்தமூரி பாலகிருஷ்ணா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிற மாநிலங்களில் அவரின் படங்களை பார்த்தவர்களை விட, அவரின் அடாவடி தனமான வீடியோக்களை கண்டவர்கள் அதிகம்.
பெரும்பாலும், பொதுவெளியில் அவரின் செயல்கள் விமர்சனத்தையே பெருகின்றது. அப்படி தான் தற்போது ஒரு வீடியோ ரசிகர்களை அதிரவைத்துள்ளது.
தெலுங்கு நடிகரான விஸ்வாக் சென் நடிப்பில் உருவாகியுள்ள "Gangs of Godavari" படத்தின் Pre- release நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பாலகிருஷ்ணா.
அத்துமீறி
கீழே அமர்ந்திருந்த போது, அவரின் காலுக்கடியில் தண்ணீர் பாட்டிலுடன் சேர்த்து மற்றொமொரு பாட்டில் இருந்தது. அது, மது பானம் போன்ற நிறத்தில் இருந்தது.அதனை கண்ட போதே, ரசிகர்கள் விமர்சிக்க துவங்கினர். பின்னர் மேடையேறிய போது, நடிகை அஞ்சலியை ஏதோ ஒன்று சைகை செய்து, பாலைய்யா தள்ளி விட்டார்.
உடனே சுதாரித்த அஞ்சலி, சிறிது சமாளித்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக அதனை கண்ட ரசிகர்கள், மது போதையில் இப்படி நடந்து கொண்டாரா பாலைய்யா என கமெண்ட் செய்து விம்சிக்கிறார்கள்.