விவாகரத்தான தயாரிப்பாளரை தெலுங்கு கரம் பிடிக்கும் அஞ்சலி..? விரைவில் திருமணம் ..!

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை அஞ்சலிக்கு தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அஞ்சலி
தமிழில் "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமான அஞ்சலி, பின்னர் "அங்காடி தெரு" படத்தில் பெரும் வெற்றியை பெற்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பல வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
அவ்வப்போது படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனமாடுவதையும் அஞ்சலி வழக்கமாக கொண்டுள்ளார்.டீ தமிழில் சூர்யாவின் சிங்கம் 2, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் ஒரு பாடல், நிதினுடன் ஒரு பாடல் என தொடர்ந்து அவ்வாறு நடித்து கொண்டே தான் இருக்கின்றார்.
தெலுங்கில் இவர் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான "கீதாஞ்சலி" படத்தின் இரண்டாம் பாகமான "கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி", ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள "ஏழு கடல் ஏழு மலை" போன்ற படங்களின் பணிகளில் பிஸியாக இருக்கின்றார்.
திருமணம்...
அவ்வப்போது அஞ்சலி திருமணம் குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.
சில மாதங்கள் முன்பு கூட அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் ரகசியமாக திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியான நிலையில், இறுதியில் அவரே அதற்கு விளக்கமளித்து முற்று புள்ளி வைத்தார்.
அப்படி தான் தற்போது மற்றுமொரு செய்தி வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது அஞ்சலிக்கு தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி வந்துள்ளது. அவர் என்ற தேடுதல் அதிகரித்துள்ள நிலையில், அவரை குறித்து எந்த தகவலும் இல்லை.
அந்த தயாரிப்பாளர் விவகாரத்தானவர் என்று மட்டுமே தகவல் குறிப்பிடுகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பதும் இந்த செய்தியில் குறிப்பிடத்தக்கது.